May 19, 2011

தேசிய விருதுகளை அள்ளியெடுத்த திரைத்துறை மகான்கள்!!

May 20, 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘’எந்திரன்’’படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பிரிவில் எந்திரனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் பாடல் எழுதியதற்காக சிறந்த பாடலாசியர் விருதை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.

பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், வைரமுத்து, நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.

சிந்திக்கவும்: அட! இவர்களுக்கு விருது கிடைத்தால் என்ன? கிடைக்காட்டி என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது சரியான கேள்வியும் கூட!! ஆமாம் இவர்கள் ஆற்றிய மக்கள் பணிதான் என்ன? இவர்கள் விதைத்தது கலாச்சார சீரழிவையும், வன்முறையையும்தான்.

சினிமா என்ற ஒரு மக்கள் ஊடகத்தை வைத்து இவர்கள் சம்பாதித்த பலகோடி ரூபாய்களுக்கு இவர்கள் ஒழுங்காக வரிகூட கட்டியது கிடையாது. எத்தனையோ இயற்க்கை பேரழிவுகள், இன பிரச்சனைகள், மீனவர் பிரச்சனைகள் இதில் இவர்கள் செய்தது என்ன?

ஒரு சராசரி கூலி தொழிலாளி இந்த நாட்டின் மீது, சக மக்கள் மீது கொண்டுள்ள ஒரு அபிமானம் கூட இவர்களுக்கு கிடையாது என்பதுதான் உண்மை. கோடிக்கணக்கான ஏழை மக்களின் பணத்தை சிறிய உழைப்பின் மூலம் அள்ளி எடுத்து அந்த பணத்தை எல்லாம் என்ன செய்யபோகிறார்கள்.

இவர்கள் மரணிக்கும் போது கூட கொண்டு போக போகிறார்களா? எந்த மக்களிடம் இருந்து இந்த பணத்தை சம்பாதித்தார்களோ அதில் இருந்து குறைந்தது ஒரு பகுதியாவது அந்த மக்களின் துயர் துடைக்க செலவு செய்யவேண்டும. இது இவர்கள் மீது கடமை. புரிந்து கொள்வார்களா இந்த கலைத்துறை நண்பர்கள்.

No comments: