May 14, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து முதல் அமைச்சர் கலைஞர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 147 தொகுதிகளை கைப்பற்றியது.
தமிழக மொத்த சட்டமன்ற தொகுதிகள் 234, இதில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களை பிடித்தது. அ.தி.மு.க. 147, தே.மு.தி.க. 28, மார்க்சிஸ்ட் 10, இந்திய கம்யூனிஸ்டு 9, மனிதநேய மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, ச.ம.க. 2, பார்வர்டு பிளாக் 1, இந்திய குடியரசு கட்சி 1, கொங்கு இளைஞர் பேரவை 1.
தி.மு.க. கூட்டணி வெறும் 31 இடங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. அதில் தி.மு.க. 23, காங்கிரஸ் 5, பா.ம.க. 3. ஆக மொத்தம் 31 இடங்கள் திமுக கூட்டணிக்கு கிடைத்தது.
தேர்தல் முடிவுகள் குறித்து முதல் அமைச்சர் கலைஞர் தனது இல்லத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு கலைஞர் தான் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகுவதற்கான கடிதத்தை, முதல் அமைச்சரின் தனிச்செயலாளர் பிரபாகர் மூலம் கொடுத்தனுப்பினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment