May 10, 2011

கேரளா மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!!

கேரளா May 11, உலகம் முழுவதும் சுமார் 81 நாடுகளில், விவசாயத்துக்கு எண்டோசல்பான் பூச்சி மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் இதை பயன்படுத்தியதால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நோய்கள் பரவுவதாகவும் குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, கேரள அரசு எண்டோசல்பான் பயன்படுத்த தடை விதித்தது. மேலும், நாடு முழுவதும் அந்த பூச்சி மருந்தை தடை செய்ய வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கேரளத்தில் எண்டோசல்பான் பூச்சி மருந்தை தயாரிக்கும் ஹெச்ஐஎல் தொழிற்சாலையை மூடுவதற்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொச்சியில் உள்ள அந்த தொழிற்சாலை, விதிமுறைகளை மீறி எண்டோசல்பான் மருந்தை தயாரிக்கிறது என்ற அடிப்படையின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகவலை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

1 comment:

மனோவி said...

எங்கும் பரவட்டும்..