May 10, 2011

போபால் வழக்கு : நாளை தீர்ப்பு!!

May 11, மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது.

இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால் 5 லட்சத்து 74ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல் ஊன முற்றவர்களாக பிறக்கின்றனர்.

அந்த போபால் விஷவாயு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசா‌ரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிந்த பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: