MAY 11, ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலின் முடிவுள் பற்றி, பரபரப்பான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகம் உட்பட ஐந்து மாநில மக்கள், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும், ஆளுங்கட்சிகளுக்கு சிக்கல் ஏற்படும் என்பதும் தெரியவந்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
ஐந்து மாநில தேர்தல் குறித்து பல மீடியாக்கள் கருத்துக் கணிப்புகள் நடத்தியது. ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தது.
அப்படி முரண்பாடுகள் இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள், ஒரு மாற்றத்தை விரும்பி ஓட்டுப் போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நடந்த கருத்து கணிப்பில் அடுத்த முதல்வராக யார்? வரவேண்டும் என விரும்புகிறீர்கள் என வாக்காளர்களிடம் கேட்டதற்கு கருணாநிதியை காட்டிலும், ஜெயலலிதாவுக்கு 5 சதவீதம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த செய்தியை CNN, IBN சேனல்கள் நடத்திய கருத்து கணிப்பில், அ.தி.மு.க., 120 முதல் 132 இடங்களை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்கிறது.
மேலும், தி.மு.க., ஆட்சியின் நலத்திட்டங்களை மக்கள் ஏற்றபோதும், ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை என்பதை ஏற்கவில்லை.
நியூஸ் எக்ஸ் சேனல், அ.தி.மு.க., 125 முதல் 135 தொகுதிகளை பெற்று தனியாக ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தே.மு.தி.க.,வுக்கு 22 முதல் 30 இடங்களும், தி.மு.க.,வுக்கு 54 முதல் 64 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment