May 8, 2011

விசாரணைக்கு வரும் பாபர் மசூதி வழக்கு!! உண்மை நிலை என்ன?

May 9, உத்திரபிரதேசம்: அயோத்தியில் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி ஹிந்து பயங்கரவாதிகளால் திட்டமிட்டு உடைக்கப்பட்டது.

பயங்கரவாதி அத்வானி தலைமையில் ரத யாத்திரை என்றபெயரில் ஒரு ரத்த யாத்திரை நடத்தப்பட்டது.

முஸ்லிம்களின் 450 வருட பாரம்பரிய மிக்க மசூதி, ஆயிரகணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் ஹிந்து தீவிரவாத இயக்கங்களால் திட்டமிட்டு உடைக்கப்பட்டது.

இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் வருடங்கள் நடந்து வந்தது. இந்தியாவின் நீதி மன்றங்களில் நிறைந்திருக்கும் காவி நீதிபதிகள் உலகமே பார்க்க உடைக்கப்பட்ட ஒரு மசூதியை சர்ச்சை கூறிய இடம் என்று பெயரிட்டது.

பின்னர் பாபர் மசூதிக்கு சொந்தமான 2.77 ஏக்கர் நிலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோஹி அகாராக்களுக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சட்டப்படி தீர்ப்பு சொல்லாமல் கட்டபஞ்சாயத்து தீர்ப்பு சொல்லி நீதிபதிகள் தங்கள் ஹிந்துத்துவா அடையாளத்தை வெளிபடுத்தினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குதான் இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

நிர்மோஹி அகாரா, அகில பாரத இந்து மகாசபா, ஜமைத் உலமா-ஐ-ஹிந்த் மற்றும் சன்னி மத்திய வக்ஃப் வாரியம் ஆகியவை தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் அப்டாப் ஆலம் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாமல், நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அதை ரத்துசெய்ய வேண்டும் என வக்ஃப் வாரியமும், ஜமைத் உலமா-ஐ-ஹிந்த் அமைப்பும் தங்கள் மனுக்களில் குறிப்பிட்டுள்ளன. ராமர் பிறந்த இடத்தில் அந்த கட்டடம் இருந்தது என தவறாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: