எப்ரல் 2,: தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நடிகை குஷ்பு கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தை முடித்து விட்டு ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திரைப்படத்துறையை பொறுத்தவரை தி.மு.க. அரசு ஏராளமான உதவிகள் செய்து இருக்கிறது. தற்போது திரைப்படம் தயாரிக்கும் எந்த தயாரிப்பாளராவது, தி.மு.க. அரசை குறை கூற முடியுமா?.
நானும் திரைப்பட தயாரிப்பாளர்தான். திரைப்படங்களை குறை கூற என்றே சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் திரைப்படங்களுக்கு பிரச்சினை. முதலில் அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நடிகர்களாக ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். ஒவ்வொரு தலைவரை பிடிக்கும். எனவே யாரும் யாருடனும் சேரக்கூடாது என்று கூற முடியாது.
தி.மு.க.வில் சேர்ந்திருக்கும் நடிகர் நடிகைகளை பார்த்தால், தி.மு.க.வின் கொள்கைகள், தலைவர் கலைஞரின் சிறப்பான வளர்ச்சி திட்டங்களால் கவரப்பட்டு சேர்ந்து இருக்கிறார்கள்.
ஆனால் அ.தி.மு.க. அணியில் சேர்ந்து இருப்பவர்கள் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக இணைந்திருக்கிறார்கள். விஜயகாந்த் முதல் சிங்கமுத்துவரை அனைவரும் அப்படித்தான். இவ்வாறு குஷ்பு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
முதலில் அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். //
அதேதான்..
Post a Comment