ஏப்ரல் 11, அரசியலில் விஜயகாந்திற்கு, "அ, ஆ' தெரியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். பா.ம.க., வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
234 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில், இரு மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பிரசாரத்திற்கு சென்று வந்துள்ளேன்.
தொகுதியில் யாரைக் கேட்டாலும் கலைஞருக்குத் தான் ஓட்டு என்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களுக்கு மூன்று வேளை சோறு போட்டவர் அவர் தான் என்கின்றனர். கலைஞர் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க, அறிவை வளர்க்க, "லேப் டாப்' தருகிறேன் என்று சொன்னார்.
ஆனால் ஜெயலலிதா, "வீட்டிற்கு 4 ஆடு, ஒரு மாடு தருகிறேன்' என்கிறார். நாங்கள் பூரண மது விலக்கு கொண்டுவர வேண்டுமென முதல்வரிடம் கேட்டதற்கு, அவர், "நானும் உங்கள் கொள்கை உடையவன் தான். படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன்' என்றார்.
ஆனால், கொள்கையே இல்லாத நடிகர் கட்சித் தலைவர், மேடையில் பேசும்போது ஆடுகிறார், தள்ளாடுகிறார், தடுமாறுகிறார். தொண்டர்களை, "ஆப்' அடிக்கச் சொல்கிறார். கட்சியில் உள்ள தொண்டர்கள் அனைவரும் நல்ல தம்பிகள் தான்.
அவர்களை திருத்தி தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போவேன், கோட்டைக்கு போவேன் என அடம் பிடித்தவர், இன்று போயஸ் தோட்டத்திற்கு சென்று விட்டார்.
நடிகர் சொல்கிறார் நான் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றால், அண்ணனாக, அப்பாவாக நடிப்பேன் என்கிறார். நீ எதையாவது நடி, எங்காவது பம்பரம் விடு. உனக்கு அரசியலில் "அ, ஆ' தெரியாது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
1. எங்கள் சாதனைகளை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள் என மேடையில் சொல்லிவிட்டு வீடு வீடாக பணம் தரும் அரசியல்வாதிகளை என்ன செய்ய போகிறோம் ?
2. ஒட்டு பதிவு அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க சொல்லி ஆணை , ஆனால் சரவணா ஸ்டோர் போன்ற பல நிறுவனங்கள் விடுமுறை அளிபதில்லை அவர்களை என்ன செய்ய போகிறோம் ?
3. வடிவேலு , குஷ்பு , சிங்கம் முது சொன்னால்தான் நாம் கேட்போம் என நினைக்கும் அறிவில்லாத அரசியல்வாதியை என்ன செய்ய போகிறோம் ?
4. இலவச கல்வி அளிக்க முடியாத அரசு மற்றவற்றை இலவசமாக தருகிறேன் என கூறி காதில் பூ சுற்றுகிறதே அதை என்ன செய்ய போகிறோம் ?
5. தமிழக மினவர்கள் காக்க படுவார்கள் என உறுதியளித்தனர் சோனியா , கருணாநிதி. இன்று ஒருவர் பலி . இப்பவும் நம்மை ஏமாற்றும் இவர்களை என்ன செய்ய போகிறோம் ?
6. மேற்கு வங்கத்தில் ௮௭ வயதானவர் ஏன் முதலமைச்சர் ஆகவேண்டும் என ராகுல் கேட்டார் , அப்பா கருணாநிதிக்கு
15 வயசா ஆகுது
7. வக்கனையா அரசியல் பேசிவிட்டு , அரசியல் பதிவு போட்டுவிட்டு ஒட்டு போடாமல் இருப்பவரை என்ன செய்ய போகிறோம் ?
இவருக்கு அரசியலில் பல்டி அடிப்பதை தவிர ஒன்றும் தெரியாது
பா.ம.க வேட்பாளர் படங்கள் & விவரங்கள்
இங்கே காண்க:
http://pmkmla.blogspot.com/
http://pmkmla.blogspot.com/2011/03/2011.html
http://arulgreen.blogspot.com/
பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html
Post a Comment