ஏப்ரல் 11, தமிழ்நாட்டில் சில தொகுதிகளில் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்று கருதும் தேர்தல் கமிஷன், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்தால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தேர்தலில் பண பலத்தை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில், தேர்தல் கமிஷனிடம் வற்புறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், தேர்தலில் பண ஆதிக்கத்தை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும், சில தொகுதிகளில் வாக்காளர்களை கவர்வதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதை கடுமையாக கருதுவதுடன், இதனால் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்றும் தேர்தல் கமிஷன் கருதுகிறது. இத்தகைய சூழ்நிலையை தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கும் சம்பவம் மீண்டும் நடந்தால், மிக கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். இவ்வாறு தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment