"ஜனங்கள்ல இன்னும் நிறைய பேர் ஏமாளியாதான் இருக்காங்கன்னு எப்படிய்யா சொல்றே...?" "இந்தத் தேர்தல்லயும் உங்களுக்கு ஆயிரத்து சொச்சம் ஓட்டு போட்டிருக்காங்களே தலைவரே!"
*"அரசியல் கட்சித் தொண்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய வம்பாப் போச்சு." "என்ன பண்றாரு?" "சாப்பாடு வச்சி, குழம்பு கொண்டு வர்றதுக்குள்ளே 'சோறு இங்கே. குழம்பு எங்கே?'னு கோஷம் போட ஆரம்பிச்சிடுறாரு!"
*"பதவி பெரிசா.... குடும்பம் பெரிசான்னு தலைவர்கிட்ட கேட்டதுக்கு, என்ன சொன்னார்?" "பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெரிசுன்னு சொன்னார்!"
*"தலைவர் ரொம்பத்தான் பயந்து போயிருக்கார்!" "எப்படிச் சொல்றே?" "நல்லா இருக்கீங்களானு விசாரிச்சாகூட, நான் எந்தத் தப்பும் பண்ணலைங்கறார்!"
*"மக்களோட தான் என்னோட கூட்டணின்னு தலைவர் மேடைக்கு மேடை பேசினது தப்பா போச்சு....!" "ஏன்... என்ன ஆச்சு...?" "தலைவர் எங்கே போனாலும், 'தேர்தல் நெருங்கிடுச்சி, வாங்க தொகுதி பங்கீடு பத்தி பேசலாம்'னு மக்கள் அவரை சூழ்ந்துக்கறாங்களாம்...!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment