ஏப்ரல் 11, கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்படவேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி. அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை.
வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.
திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.
கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்படவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இவன் அடுத்த ராமதாஸ் ....
5 வருஷமா திட்டிவிடு இப்ப காலுல விழுந்த அயோக்கியன் .
இவன்லாம் ஏன் அரசியலுக்கு வாறன்
Post a Comment