ஏப்ரல் 11, சிந்திக்கவும்: யார் உண்மையான தமிழர் தலைவன் என்ற கோள்வி நம்முன்னே நிற்கிறது. தமிழக அரசியல் தலைவர்களில் யார்? தமிழர் நலன்களில் உண்மையிலேயே அக்கறையோடு செயல்பட்டார் என்பதை இந்த தருணங்களில் நினைவு கூற வேண்டியது உள்ளது.
கருணாநிதி இது நாள்வரை தமிழை பயன்படுத்தி தன்னுனைய அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்காமல் பார்த்துகொண்டார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். ஆனால் தன் குடும்பத்தார் எல்லாரையும் ஹிந்தி படிக்க வைத்தார்.
தமிழர் தலைவன் என்று கூறி ஒரு மாயை ஏற்படுத்தி அதை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்தார். பெரியார், அண்ணா, போன்ற திராவிட தலைவர்கள் மத்தியில் கருணாநிதி ஒரு கோடரி கொம்பு. இந்த நேரத்தில் நாம் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.
இவர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும் மக்கள் நலனிலும் தமிழர்கள் நலம் பேணுவதிலும் சிறந்த தலைவராக விளங்கினார். இவர் தமிழீழ போராட்டத்தை உயிர் ஊட்டினார். அதற்காக வேண்டி பொருளுதவியும் இன்னபிற உதவிகளும் செய்தார்.
நமது தமிழர் தலைவர் என்று சொல்லும் கருணாநிதி ஈழதமிழர்கள் விசயத்தில் நன்றாக நடித்தார். எம்.ஜி.ஆர். படத்தில் நடித்தார் அரசியலில் மக்களுக்காக நல்ல பல காரியங்களை செய்தார். நமது கருணாநிதியோ சிறந்த அரசியல் நடிகர்.
அரசியலில் எப்படி எல்லாம் அழுது கண்ணீர் வடித்து காரியம் சாதிக்க முடியும் என்பதில் வல்லவர். ஈழதமிழர்கள் விசயத்தில் சிறந்த நாடகம் ஆடினார். அவர் நினனைத்திருந்தால் தமிழகத்தில் பெரும் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி மத்திய அரசை பணிய வைத்திருக்க முடியும்.
ஆனால் இவருக்கு பதவி சுகம்தான் முக்கியமாக போனது. ஈழதமிழர்கள் இன்றுபடும் அவதிகளுக்கும் துன்பங்களுக்கும் கருணாநிதி ஒரு காரணம் ஆவார். தமிழ், தமிழர் நலம், என்று அரசியல் நடத்தி பெரும் கோடிஸ்வரன் ஆனா கருணாநிதி, குறைந்த பட்சம் ஈழதமிழர்கள் கொல்லப்படும் போதாவது ஏதாவது உருப்படியாக செய்திருக்கலாம். இவரை வரலாறு மன்னிக்காது. தமிழர்கள் வரலாற்றில், இவர் ஒரு துரோகியாக பதியபடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment