Mar 12, 2011

தமிழர் தலைவருக்கா இந்த நிலைமை வரவேண்டும்?

அன்று ஒரு நாள் கள்ளகுறிச்சி காண ரயில் தண்டவாளத்தில் வீரமாக தலைவைத்தாய் தமிழகமே உன்பின்னால் அணிவகுத்து நின்றது தலைநிமிர்ந்து நின்றாய், ஹிந்திதிணிப்பை எதிர்த்தாய் அணி வகுத்தார்கள் தமிழர்கள் உன் பின்னால், அடைந்தாய் வெற்றி!,

இந்தியாவின் இரும்புபெண் இந்திராகாந்தி அம்மையாரை எமெர்ஜென்சியில் எதிர்த்தாய் வெற்றி அடைந்தாய்,ஈழ தமிழருக்காக குரல் கொடுத்தாய் தலை நிமிர்ந்து நின்றாய்,எப்படி என்று சிந்தித்துப்பார் ஏன்? ஏன்?புரிகிறதா உனக்கு?mஅநீதங்களை எதிர்த்து நீதிக்காக எப்போதெல்லாம் நீ வீதிக்கு வந்தாயோ?mஅப்போதெல்லாம் தமிழர்கள் உன்னுடன் நின்று அதை அதாவது நீ நினைத்ததை வெற்றி ஆக்கி தந்தார்கள். அதை வைத்து நீ அரியணை ஏறினாய்.

ஆனால் இன்று தமிழர்கள் கொல்லபடுகிறார்கள் நீ கண்டு கொள்ளவில்லை . ஜாதி வெறியர்கள் உன்னை கீழ்ஜாதி என்று புறம் காலால் எட்டி உடைத்தபோது உன்னை உடன் பிறந்தவனாக நினைத்து உன்னோடு தோளோடு தோள் நின்று உன் வெற்றிக்கு பாடுபட்ட முஸ்லிம் மக்கள் தமிழகம் கோயம்புத்தூரில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் போலீஸ் வெறியர்களால் சுட்டு கொல்லப்பட்டபோது நீ சொன்னாய் நான் மூன்று நாளாக முதலமைச்சராக இல்லை என்றாய். ஆனால் தற்போது அந்த போலீஸ் வெறியன்னுக்கு பதவி உயர்வு கொடுத்து மீண்டும் கோயம்புத்தூரில் வேலை கொடுத்திருக்கிறாய்.

ஈழ தமிழர்கள் சிங்கள ஜாதி வெறியர்களால் கொல்லப்படும்போது நீ விழுந்து, விழுந்து சோனியா எஜமானிக்கு சேவகம் செய்தும்.ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பதுக்குவதில் மட்டும் தான் உன் கவனம் இருந்ததே தவிர செத்து மடியும் தமிழர்களை பற்றி நினைக்கவில்லை. விளைவு உன்னை நம்பியவர்களை நீ வஞ்சித்தாய்! நீ நம்பியவர்கள் உன்னை வஞ்சித்து கொண்டிருகிறார்கள்

அன்று ஜெயலலிதா உன்னை அரெஸ்ட் செய்தபொழுது அரண்ட மனம் இன்று அதை காண்பதற்கு ஏங்குகிறது. எம் ஜி ஆரை, இந்திராவை, வீரத்தோடு எதிர்த்து தலை நிமிர்ந்து நின்ற நீ இன்று இத்தாலி சோனியாவிடம் கேவலப்பட்டு நிற்ப்பதை பார்க்கும்போது கவலையாக இருந்தாலும் நீ உன்னை நம்பியவர்களுக்கு செய்த துரோகத்தை நெனைக்கும்போது நீ இன்னும் கேவலப்படவேண்டும் என்றே மனம் தோன்றுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் சாபம் உன்னை சும்மா விடாது .

தமிழர்கள் உன்னுடன் இருந்தார்கள் தலை நிமிர்ந்து நின்றாய், தமிழர்களை வஞ்சித்தாய் கேவலப்பட்டாய். தொடரட்டும் உன் கேவலங்கள்.

முரசு...............................................................முழங்கும்.

3 comments:

rajamelaiyur said...

உண்மை .. ரொம்ப உண்மை

rajamelaiyur said...

உண்மை .. ரொம்ப உண்மை

rajamelaiyur said...

Evana thalaivar?