ஏப்ரல் 1, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து நேற்று, சீமான் பேசினார். அப்போது மேடையில் இருந்த பேனருக்கு, அனுமதி பெறாததால், அதை அகற்ற டி.எஸ்.பி., இளங்கோ உத்தரவிட்டார்.பேனர், கட்சி கொடிகளை போலீசார் முன்னிலையில் அலுவலர்கள் அகற்றினர். இதற்கு சீமான், மாவட்ட அமைப்பாளர் தீனதயாளன், நிர்வாகிகள் அன்வர்ராஜா, சோமசுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்தனர்.
என்பதாக பொய் கூறி வி.ஏ.ஓ., கோபிநாத் புகாரின்படி, 143 (கூட்டம் கூடியது); 188 (அனுமதியின்றி கொடி, பேனர் கட்டுதல்); 353 (அரசு பணியை தடுத்தல்); 506(1)(கொலை மிரட்டல்) பிரிவுகளின் கீழ், இன்ஸ்பெக்டர் சங்கர், எஸ்.ஐ., வடிவேல்முருகன் வழக்கு பதிந்தனர்.

No comments:
Post a Comment