Mar 31, 2011

வரும் ஆனா வராது; வடிவேல்!!

எப்ரல் 1, திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேல் இன்று ஐஸ்அவுஸ், ஜாம்பஜார் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ‘’வீட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் வீடு சிறக்கும். அதே போல் நாட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் நாடு சிறக்கும்.

கலைஞர் பெரியவர் 5 ஆண்டில் நிறைய திட்டங்களை தந்திருக்கிறார். சொன்னதை செய்துள்ளார். அவர் தலைமையில் மீண்டும் ஆட்சி வந்தால் நாடு சிறப்பாக இருக்கும்.

கலைஞர்போல் ஜெயலலிதா அம்மையாரும் திட்டங்களை பட்டியல் போட்டு அறிவித்துள்ளார். கலைஞர் திட்டங்கள் வரும்.

ஆனால் அவங்க (ஜெயலலிதா) திட்டங்கள் வரும்... ஆனால் வராது அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் வராது’’ என்று பேசினார்.

No comments: