Mar 31, 2011

கருணாநிதி காலை தொட்டு வணங்கி இளங்கோவன் சாதனை!!

எப்ரல் 1, ஈரோட்டில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

திமுக மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையான விமர்சன அம்புகளை எய்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த கூட்ட மேடையில் ஏறினார். அதுமட்டுமல்லாது முதல்வர் கருணாநிதிக்கு அருகில் அமர்ந்தார்.

அதுமட்டுமா? முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து தள்ளினார். பின்னர் பேச வந்த முதல்வர், பத்திரிக்கைகளில் எல்லாம் இடம்பெறப்போகும் செய்தி இதுதான். அதிசயம்!

கருணாநிதியும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒரே மேடையில்!! என்றுதான் எழுதப்போகிறார்கள். இளங்கோவன் இன்று என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

நான் பெரியார் குருகுலத்தில் பயின்றபோது குழந்தைப்பருவத்தில் இருந்த இளங்கோவன் என் மடியில் தவழ்ந்திருக்கிறார்’’ என்று பேசியபோது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எழுந்து முதல்வர் காலைத்தொட்டு வணங்கினார்.


சிந்திக்கவும் : இதுதான் பகுத்தறிவின் லேட்சனமாக்கும். ஜெயலிதா காலில் விழுந்து வணங்குகிறார்கள் இது என்ன என்று கேலி செய்த பகுத்தறிவு பாகலவர்கள் இப்பொது என்ன சொல்ல ஒரு மனிதன் காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம் என்ன? கலாசாரமோ!! இவர்கள் என்று சுயமரியாதையை கற்க போகிறார்களோ!!

No comments: