புவனேஸ்வர்: எதிரிகள் அனுப்பும் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இன்று இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள், எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை சோதித்து வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
ஒரிசா மாநிலம் தம்ராபாதக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. காலையில் முன்னதாக 9.35 மணி அளவில் சண்டிப்பூர் கடல்பரப்பில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் 3 நிமிடத்தில் வீலர் தீவில் இருந்து புறப்பட்ட ஏவுகணை வானில் இடைமறித்து தாக்கி அழித்தது. செலுத்தப்பட்ட ஏவுகணையை வானில் 16. கி.மீட்டர் செங்குத்து உயரத்தில் சென்று தாக்கி அழித்ததாக கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment