தேர்தல் தேதி அறிவித்தாயிற்று. இனி நாடே திருவிழாக் கோலம் ஆகும். இதுவரை ஏறிட்டுக்கூட பார்த்திராத உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் இப்போது உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அளவளாவுவார்கள். கை கூப்புவார்கள்.
ஏன், காலில் கூட விழுவார்கள். சில தொகுதிகள் இதில் விதிவிலக்கு பெறும். அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு உருப்படியாக ஏதாவது செய்திருப்பார்கள். உண்மையிலேயே மக்களுக்காக உழைத்திருப்பார்கள்.
தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல், ஏன் தொகுதி பக்கமே தலை வைத்துப் படுக்காத எம்.எல்.ஏ.க்களை இந்த உலகுக்கு நாம் பறைசாற்ற வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ. க்களை இனியும் உருவாக்காதீர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும். மக்களுக்காக உண்மையிலேயே உழைத்த, உருப்படியாக தங்கள் தொகுதிகளுக்கு ஏதாவது செய்த எம்.எல்.ஏ.க்களை நாம் இனம் காண வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
அதற்காக பாலைவனத்தூது ஆரம்பிக்கவிருக்கும் புதிய தொடர்தான் உங்கள் தொகுதி! - உங்கள் எம்.எல்.ஏ! ஆனால் வாசகர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் தொடரை தொடர முடியாது. வாசகர்களாகிய நீங்கள் உங்கள் தொகுதியின் நிலவரம், உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடு, அவர்களால் உங்கள் தொகுதிக்கு ஏற்பட்ட வளர்ச்சி அல்லது பின்னடைவு... போன்றவற்றை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
நாங்கள் ஒவ்வொரு தொகுதியையும் வாசகர்களாகிய உங்களின் மூலம் அலசி ஆராய்ந்து உண்மையான நிலவரத்தை மட்டும் வெளியிடவுள்ளோம். இந்தத் தகவல்களை உங்கள் தொகுதியின் இன்னபிற மக்களும் அறிந்து விழிப்புணர்வு பெறுவார்கள். அத்தோடு சரியான நபருக்கு, சரியான கட்சிக்கு அவர்கள் வாக்களிப்பார்கள். முடிந்தால் புகைப்படங்களுடன் கூடிய விமர்சனங்களை எழுதி எங்களுக்கு அனுப்பி வையுங்கள். மறவாமல் உங்கள் தொகுதியின் பெயரையும், உங்கள் எம்.எல்.ஏ.வின் பெயரையும் தெளிவாகக் குறிப்பிடவும். நாட்டைக் காப்பாற்ற புறப்படுங்கள்! ஓட்டை வென்றெடுக்க ஒன்றுபடுங்கள்!!
சிந்திக்கவும்: இது பாலைவன தூது என்ற இணையதளத்தில் நடத்தப்படும் சர்வே நீங்களும் உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களை பற்றி, electionsurvey@thoothuonline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்களேன். இது ஒரு நல்ல முயற்சியாக தோன்றுகிறது. பாலைவனதூதுக்கு நமது வாழ்த்துக்கள். நல்லது யார்? செய்தாலும் நமது ஆதரவு உண்டு. இது போல மறுமலர்ச்சி சிந்தனைகள் சிந்திக்கவும் இணையதளத்தால் வரவேற்க்கப்படுகிறது. நமது சிந்திக்கவும்.நெட் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
உங்கள் அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல். www.sinthikkavum.net, sinthikkavum.com
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நான் அப்பவே சொன்னேன்.. இந்த விளையாட்டுக்கு நான் வரமாட்டேன்னு.. சொன்னாக் கேளுங்கப்பூ..
Post a Comment