மார்ச் 24, புதுடெல்லி: 1984-ஆம் ஆண்டு நடந்த போபால் விஷவாயு விபத்துத் தொடர்பாக யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சேர்மன் வாரன் ஆண்டர்சனை ஒப்படைக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவதற்கு அனுமதியளிக்க கோரி சி.பி.ஐ டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் வினோத் யாதவ் முன்பாக 33 பக்கங்களைக் கொண்ட மனுவை சி.பி.ஐ சமர்ப்பித்துள்ளது. போபால் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் ஆண்டர்சனை விசாரிப்பதற்காக அவர் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது.
இம்மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணத்திற்கு காரணமான போபால் விஷவாயு விபத்து வழக்கில் போபால் நீதிமன்றம் வாரன் ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
விஷவாயு ஏற்பட்டு சில தினங்களுக்குள்ளாகவே போபால் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட ஆண்டர்சனுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. அதன் பிறகு அமெரிக்காவிற்கு சென்ற ஆண்டர்சன் பின்னர் ஒருபோதும் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment