மார்ச் 22, புதுடெல்லி: டாக்டர். அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியை மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; டாக்டர். அம்பேத்கரின் பிறந்த நாள் ஏப்ரல் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏப்ரல் 14-ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.அந்நாளில் மத்திய அரசு சார்பான அனைத்து அலுவலகங்கள், தொழில்துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவன ஒப்பந்த சட்டத்தின் படி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் ஏப்ரல்14-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படாது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

2 comments:
இது அவருக்கு கிடைத்த மரியாதை.
இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த ஒரு மாமேதைக்கு தாமதமாக கொடுக்கப்பட்ட மரியாதை. இதுவே இவர் ஒரு உயர் குலத்தில் பிறந்திருந்தால் இந்த பார்பன பத்திரிக்கைகள் இவர் புகழ்பாடியிருக்கும். அம்பேத்கருக்கு வாழும்போதும் சரி, இப்பவும் சரி, அவரை மதிக்க வேண்டிய அளவுக்கு இவர்கள் மதிக்கவில் என்பது ஒரு வருத்தமான செய்தியே.
Post a Comment