Mar 22, 2011

வீரமணி ஐயா!! ஏன் இந்த விபரீத முடிவு!!

மார்ச் 23,: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வரும் 25ஆம் தேதி வில்லிவாக்கம் தொகுதியில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனை ஆதரித்தும், கொளத்தூரில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதரித்தும் பிரச்சாரம் செய்கிறார்.

26ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். 28ஆம் தேதி மேட்டுப்பாளையம், குன்னூர் தொகுதிகளிலும், 29ஆம் தேதி பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தொகதிகளிலும், 30ஆம் தேதி பெரம்பலூர், குன்னம் தொகுதிகளிலும், 31ஆம் தேதி விராலிமலை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், ஏப்ரல் 1ஆம் தேதி தூத்துக்குடி, பாளையங்கோட்டை,
திருநெல்வேலி, 2ஆம் தேதி உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை மையம் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

சிந்திக்கவும்: ஈழதமிழர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட காரணமாக இருந்த "காங்கிரசோடு ஆல்லவா" இவர் கூட்டு வைத்துள்ளார் . இவர் உங்கள் திராவிட கொள்கையில் இருந்து மாறி "துருபிடித்து போயி" ரொம்பநாளாச்சி. அவர் தமிழ்நாட்டை எப்படி? தன் குடும்பத்தார்களுக்கு பிரித்து கொடுக்கலாம் என்று பார்கிறார். இவரை மீண்டும் வனவாசம் அனுப்பினால்தான் சரியாக வரும்.

1 comment:

மர்மயோகி said...

அன்புள்ள aboosumaiya தங்கள் ஒரு முஸ்லிம் என்று நினைக்கிறேன்..நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு எப்படி பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருக்காலாம்..வெட்ககேடு..
இலங்கை தமிழர் பிரச்சினை எனபது அவர்கள் உள்நாடு சம்மந்தப்பட்டது..
தயவுசெய்து விடுதலைப் புலிகளின் கைக்கூலிகள் சீமான், வைகோ போன்றவர்களை ஒரு பொருட்டாக கருதவேண்டாம்..உங்கள் வெப் பேஜில் உள்ள விடுதலைப் புலிகளின் பயங்கரவாத சின்னகளை எடுத்துவிடவும்..