மார்ச் 29,: பாகிஸ்தான் அதிபருக்கும், பிரதமருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கிரிக்கெட் பார்க்க அழைப்பு விடுத்திருப்பதற்கு ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான சிவசேனை தலைவர் பால் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சிப் பத்திரிகையான "சாம்னா"வில் இன்று அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் பிரதமரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் அரையிறுதியைக் காண வரும்படி பாக். அதிபர் ஜர்தாரிக்கும், பிரதமர் கிலானிக்கும் இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமைதிக்கான நடவடிக்கை என்ற பெயரில் மொஹாலி கிரிக்கெட்டை பார்க்க ஜர்தாரியும் கிலானியும் அழைக்கப்படும்போது, கசாப்புக்கும், அப்ஸல் குருவுக்கும் மட்டும் ஏன் அநீதி இழைக்கப்படுகிறது? அவர்களுக்கும் கிரிக்கெட் பார்க்க அழைப்பு விடுத்து இருக்கலாம் என்று எழுதி இருந்தார்.
சிந்திக்கவும்: என்று எல்லாம் இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை, அல்லது நட்புறவு குறித்து பேசப்படுகிறதோ அதை இந்த ஹிந்த்துதுவா பயங்கரவாதிகளால் பொறுத்து கொள்ள முடியாது. அதை கெடுக்கும் வண்ணம் ஏதாவது செய்வார்கள்.
இந்தியா, பாகிஸ்தான் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று இருநாட்டு மக்களும் நினைகிறார்கள். அதற்காக வேண்டி இருநாட்டு அரசுகளும் ஏதாவது உருப்படியாக செய்ய நினைக்கும் பொது எல்லாம் இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அந்த பேச்சு வார்த்தைகளை சீர்குலைக்க ஏதாவது ஒரு குண்டு வெடிப்பை நடத்துவார்கள்.
இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்கள். ஒரு நாட்டில் உலக கோப்பை கிரிக்கெட் நடத்துகிறோம் என்று ஏற்று கொண்ட பின்னால் இப்படி பேசுவது பட்ச்சை தீவிரவாதம்.
உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளின் பிரதமர்களை நடத்தும் நாடு மரியாதை நிமித்தம் அழைப்பது பண்பாடுதான். அதில் அவர்கள் கலந்து கொள்வதும் ஒன்றும் கொலை குற்றம் இல்லை.
அதுபோல் இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவுகள் இதன் மூலம் ஏற்படட்டும் என்றுதான் நடுநிலையாக சிந்தனை செய்யவேண்டும் அதை விட்டு விட்டு பாகிஸ்தான் மும்பையில் பைனல் விளையாடும் நிலை ஏற்பாட்டால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தீவிரவாதமாக பேசிவருகிறார்.
ஒரு ஹிந்த்துதுவா பத்திரிக்கையை வைத்து கொண்டு மொழிவெறி பிடித்து, மதவெறி பிடித்து கலவரங்களை தூண்டும் முகமாக பேசியும், எழுதியும் வருவது இந்த ஹிந்துத்துவா சித்தாந்தவாதிகளின் யோக்கிதையை படம் பிடித்து காட்டுகிறது.
இந்த ஹிந்துத்துவா வெறியர் பால்தாக்ரே மும்பையில் நடத்திய கலவரங்கள்தான் எத்தனை? எத்தனை? இந்த வழக்குகளை விசாரித்து இவர் குற்றவாளி என்று நிரூபணம் ஆகி இவர் ஜெயிலுக்குள் போகும் நிலை வந்ததும் இவரது சாம்னா பத்திரிகையில் எழுதினார் என் மேல் கைவைத்தால் மும்பையே பற்றி எறியும் என்று.
சட்டதிருக்கு கட்டுபடாத ரவுடி இவர். இவர் செய்த செயலுக்கு தண்டனைகள் பெறாமல் சட்டத்தை ஏமாற்றி வருகிறார். மத்தியில் ஆளும் ஆண்மை அற்ற காங்கிரஸ் அரசு மும்பை கலவரகாரன் பால்தாக்ரே, ரெத்த யாத்திரை புகழ் அத்வானி, குஜராத் கலவர நாயகன் மோடி போன்ற கொடும் குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் அறிக்கை போர் நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. என்று இவர்கள் கோட்டம் அடக்கப்படுமோ!! என்று இவர்கள் ஆரஜகம் அடக்கபடுமோ பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்கள் அன்புடன்: சந்தோஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment