மார்ச்29, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதிலும், உலகளாவிய வெப்ப அதிகரிப்பிற்கு வழிவகுப்பதுமான பசுமை வாயுவை அமெரிக்காவும், சீனாவுமே அதிகளவில் வெளிவிடுகின்றன.
இதை கட்டுபடுத்த இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார். முன்னணியில் இருந்த பிரேசில் இன்று அதனை 75 சதவீதம் வரை குறைத்துக் கொண்டிருப்பதை இந்த நாடுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கூறினார்.
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் கலந்துரையாடல் முடிவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பிரேசில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment