Mar 3, 2011

கோத்ரா மறு நீதிவிசாரணை தேவை!! பிரசாந்த் பூஷண்!!

புதுடெல்லி,மார்ச்.3:கோத்ரா ரெயில் எரிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டுமென பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியுள்ளார். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 31 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு 62 பேர் விடுதலைச் செய்யப்பட்ட சூழலில் பிரசாந்த் பூஷண் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். இது மோடி அரசின் நீதியற்ற கமிஷன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தீர்ப்பு. இதில் ஏந்த விதமான அறிவியல் ஆதாரங்களும் சமர்பிக்கப்படவில்லை. மத்திய அரசால் போடப்பட்ட கமிசனில் இருந்து முக்கிய அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு இப்படி அமைந்தால்தான் இதை வைத்து நடத்திய கலவரத்தை நியாப்படுத்த முடியும் என்பதே மோடியின் எண்ணம் என்றும் கூறினார்.

தவறான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தவறான தீர்ப்பை கோத்ரா சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ளது என பிரசாந்த் பூஷண் கூறுகிறார். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடுச் செய்ய முடியுமென்றாலும், கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைக் குறித்து ஒரு மறுவிசாரணை நடத்தவேண்டும். தவறான சூழலில் எழுந்த வழக்கு இது. மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீது தீவைப்பு குற்றம் சுமத்தியதில் ஒரு நியாயமுமில்லை. அது போதாது என அவர்கள் மீது கொலைக் குற்றமும், சதித்திட்டம் தீட்டிய குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.' என பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

1 comment:

M.Mani said...

போலி மதச்சார்பற்றவர்கள் இப்படித்தான் கூறுவார்கள். தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதுதான் முறையானது.