Mar 13, 2011

பிரபாகரனும் நாடு கடந்த தமிழீழ அரசும்!!!

தமிழீழ விடுதலைக்கான போராட்டமானது பல்வேறு வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் முடக்கப்பட்டபோது, தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் அதியுயர் நிலையை தக்கவைப்பதற்கான முனைப்பு பல்வேறு தரப்புகளிடமிருந்து முன்வைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக நாடு கடந்த தமிழீழ அரசானது நிறுவப்பட்டதுடன் அதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் மூலம் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்கான வெளி இன்னமும் திறக்கப்பட்டே உள்ளது என்ற யதார்த்தத்தை தமிழர்களுக்கு எதிரான சிங்களதேசமும் இன்னபிற சக்திகளும் புரிந்துகொண்டன.

தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் தன்னைச் சுடுமாறு தனது போராளிகளுக்கு கட்டளை வழங்கிய தலைவர் பிரபாகரனைப் போல, தமிழீழத் தனியரசிற்கான கோரிக்கையை உறுதியோடு முன்னெடுக்கும் ஒருவரால்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக இருக்கமுடியும் என்பதை உருத்திரகுமாரனோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசின் ஏனைய பிரதிநிதிகளோ அறியாதவர்கள் அல்ல.

தலைவர் பிரபாகரன் வழியில் நாடு கடந்த தமிழீழ அரசு சிறப்பான முறையில் செயல்படுகிறது என்பது தமிழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்திதான். வேற்றுமைகளை மறந்து தமிழ் மக்கள் தனி தமீழம் அமைய பாடுபட வேண்டும். இல்லையில் நமது போராளிகள் செய்த உயிர் தியாகத்தை நாம் கொச்சை படுத்தியது போல் ஆகும். ஒற்றுமையோடு செயல் படுவோம் சிங்கள பேரினவாத கயவர்களை முறியடித்து தனித்தமிழீழம் அமைப்போம் வாரீர்.

4 comments:

பாத்திமா ஜொஹ்ரா said...

முட்டால்தனமான் வாதம்

பாத்திமா ஜொஹ்ரா said...

தீவிரவாதிகளுக்கு துணை போகவேண்டாம்.இது என் எச்சரிக்கை

PUTHIYATHENRAL said...

வரலாறு தெரியாமல் சொல்கிறீர்கள் பாத்திமா ஜொஹ்ரா அவர்களே? தமிழர்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிமக்கள். சிங்களவர்கள் வந்தேறிகள். இந்த வந்தேறி சிங்கள பேரினவாதத்தினர் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து வன்முறைகள், கலவரங்கள் இதன் காரணமாக தமிழர்கள் தொடங்கிய அமைதி போராட்டத்தையும் சிங்கள அரசு பயங்கரவாதிகள் ஒடுக்கி தமிழர்களை ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கி தள்ளினார்கள். அதனால் ஒரு இன மக்களின் விடுதலை போராட்டத்தை தீவிரவாதம் என்று கொட்ச்சை படுத்துவது சரியில்லை.

அடுத்து நீங்கள் தீவிரவாதம் குறித்து எச்சரிக்கை செய்யவேண்டும் என்றால்? இந்திய அரசு பயங்கரவாதத்தை பற்றி எச்சரிக்கை செய்யவேண்டும். எப்படி இந்திய அரசு பயங்கரவாதம் காஷ்மீரில் கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பதை பாருங்கள். அதுபோல் பழங்குடி மக்களின் உரிமைகளை பறித்து காட்டு வேட்டை என்கிறபெயரில் அவர்களின் நிலங்களை பிடுங்கி அந்நிய பண முதளிகளுக்கு தாரைவார்க்கும் அரசு பயங்கரவாதத்தை பற்றி எச்சரிக்கை செய்யுங்கள், க்ரீன்வேட்டை என்கிறபெயரில் சொந்த மக்களை துணை ராணுவத்தை வைத்து சுட்டு கொல்லும் அரசு பயங்கரவாததிற்கு எச்சரிக்கை சொல்லுங்கள்.

இந்திய நாட்டை தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் சுடுகாடாக்கி, மத நல்லிணக்கத்தை கெடுத்து குட்டி சுவராக்கும் ஹிந்துத்துவாவை தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று எச்சரிக்கை செய்யுங்கள். நாடு கடந்த தமிழீழ அரசு என்பது அமெரிக்க நியூயார்க் நகரில் தான் அதன் முதலமைச்சர் ருத்ரன், மற்றும் எம்பிகள் இருகிறார்கள். அமெரிக்க அரசாங்கமே அதை தீவிரவாதம் என்று சொல்லவில்லை. மேலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளை இங்கிலாந்து அமைச்சரவையில் பேச அனுமதித்தார்கள் அவர்கள் இந்த அரசை தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை. நான் உங்களை தவறாக சொல்லவில்லை உங்களுக்கு வரலாறு தெரியாததால் இதை சொல்கிறீர்கள். இந்த முதலாளித்துவ, பேரினவாத, ஊடகங்கள் சொல்லும் செய்திகளை வைத்து உங்களை போல் உள்ள நிறைய மக்கள் சொல்லிவருவது கவலை அளிக்கும் செய்தியே. உங்களது கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது. கருத்து சொல்லியதற்கு நன்றி.

இளமாறன் said...

பாத்திமா ஜொஹ்ரா மட்டும் அல்ல தமிழகத்தில் உள்ள முக்காலிவாசி பேர், பிழைக்க சென்ற இடத்தில் தனி நாடு‍ கேட்கலாமா என்று‍ என்னிடம் நிறைய பேர் வாதம் செய்தது‍ உண்டு. அவர்களுக்கு, இலங்கையிலேயே பூர்வகுடிகளாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள், பிறகு‍ வந்தவர்கள் தான் சிங்களவர்கள், பிரத்தானியா காலத்தில் இங்கிருந்து‍ பிழைக்க சென்றவர்கள் தான் மலையக தமிழர்கள் (இந்திய தமிழர்கள்)இதை தமிழகத்தில் உள்ள படித்த மக்கள் கூட அறிந்திருக்கவில்லை, இதற்கு‍ தமிழ் ஊடகங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் உலக ஆய்வின் படி, தற்போதைய இந்தியாவின் தென்பகுதியும், இலங்கையும் மற்றும் பல தீவுகளும் ஒருங்கே இணைந்து‍ ஒரு‍ பெரிய கண்டமாக இருந்தது‍ தான் குமரி கண்டம்(தமிழில்) ஆங்கிலத்தில் லெமூரியா கண்டம் என்று‍ வரலாற்று‍ ஆசிரியர்களின் கருத்து, அப்படி‍ பார்த்தாலும் தென் பகுதி முழுவதும், தமிழின் மூத்தகுடி‍ திரவிடர்கள் வாழ்ந்தர்ர்கள் (அப்போது‍ தெலுங்‌கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தோன்ற வில்லை) தமிழின் முதல் சங்கம் குமரி கண்டத்தில் தான் இருந்தது‍ என்று‍ நமது‍ தமிழரின் வரலாறு‍ கூறுகிறது. இதையெல்லாம் விடு்ங்கள், பிரத்தானிய ஆட்சியில் தென் ஆப்ரிக்காவிற்கு‍ பிழைப்பு தேடி‍ சென்ற தமிழர்கள் இரண்டு‍ தலைமுறைகளை கடந்த பின் சமயுரிமையும், ஒட்டு‍ உரிமையையும், அந்த மண்ணின் பூர்வ குடிகளான கருப்பின மக்கள் பெருவதற்க்கு‍ பல ஆண்டுகளுக்கு‍ முன்னரே, அந்த உரிமையை பெற்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் இந்திய தமிழர்கள் பிழைக்க சென்று‍, இலங்கையின் தேயிலை தோட்டத்தில் உழைத்து‍ இலங்கையை வளம் கொழிக்க வைத்த இனத்தில் பாதி பேருக்கு, சீறிராமோ-ஸாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டு‍ இந்தயா துரத்தப்பட்டார்கள். தென்ஆப்ரிக்கா, இலங்கை வித்தியாத்தை பாருங்கள், இது‍ போன்ற நிறைய வரலாறுகள், இதை அனைவரு்ம் தெரிந்து‍ கொண்டு‍, பிறகு‍ விமர்சிக்க முன்வர வேண்டும். ஈழ தமிழர்களுக்கு‍ பலருக்கு‍ கூட இந்த வரலாறு‍ தெரியாது, அரசியல்வாதிகளுக்கு‍ மலையக தமிழர்கள் மேல் அக்கறை இருந்தது‍ இல்லை, 1970 க்கு‍ முன் ஈழ தமிழர்களுக்கு‍ இலங்கையில் அவ்வளவாக பிரச்சனை இல்லை, மலையக தமிழர்களுக்கு‍ பிரச்சனை ஏற்படும் போது‍, கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் தான் ஈழ தமிழர்கள். தயவு செய்து‍ யாரும் தவறாக நினைக்க வேண்டாம், ஈழ தமிழர்களில் கூட கிழக்கு, வடக்கு‍ என்று‍ பிரிவினை இருந்தது. புலிகள் இயக்கம் தோன்றிய பிறகு, அணைவரும், ஈழ தமிழர்கள் என்று‍ ஒற்றுமை ஏற்பட்டது‍, நாடு‍ கடந்த தமிழீழ அரசுக்கு‍ எதிராக கருத்துகள் வைக்காமல் ஈழ தமிழர்கள் அனைவரும் எந்த வித வித்தியாசம் இல்லாமல் நா.க. த.அரசுக்கு‍ ஆதரவு தெரிவியுங்கள். மற்ற நாட்டு‍ தமிழர்களும் தங்களது‍ ஆதரவினை வழங்குவார்கள்.