Mar 9, 2011

ஈழத்தமிழர் நலம்காக்க வைக்கோ தலைமையில் மூன்றாம் அணி!!

சென்னை, மார்ச் 9: அதிமுக அணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி மதிமுக தலைமை தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களும் மதிமுகவின் முயற்சிக்கு தோள் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது.

இதை முன்பே செய்திருக்கணும் வைகோ, இருந்தால் காலம் தாழ்ந்துவிடவில்லை தீவிர முயற்சி செய்தால் சாதிக்க முடியும். திமுக அதிமுக என்னும் கொடிய பணம் தின்னி கட்சிகள் ஒழிக்கப்படவேண்டும். தமிழ்த்தேசிய உணர்வாளர்களையும், மனித நேய ஆர்வலர்களையும், சிறிய கட்சிகளையும், ஊழலை ஒழிக்க எண்ணுபவர்களையும் கொண்ட ஒரு மூன்றாம் அணி உருவாக்க படவேண்டும்.

தமிழ் நாட்டில் திமுக, அதிமுக இந்த இரு கட்சிகளுக்குமே தக்க பாடம் புகட்ட வேண்டும். ஈழ தமிழர் ஆதரவு சிந்தனை படைத்த மக்களும், தனி தமிழ்நாடு சிந்தனை படைத்த மக்களும் ஒரு சேர்ந்து ஒரு மூன்றாம் அணி அமைத்து செயல்பட்டாள் வெற்றி நிச்சயம்.

2 comments:

Anonymous said...

Sariyana Sinthanai. Vaiko Veliyeravendum.

Anonymous said...

ஈழ தமிழர் ஆதரவு சிந்தனை படைத்த மக்களும், தனி தமிழ்நாடு சிந்தனை படைத்த மக்களும் ஒரு சேர்ந்து ஒரு மூன்றாம் அணி அமைத்து செயல்பட்டாள் வெற்றி நிச்சயம் --
பேசாம ஈழத்திலேயே போயி போட்டி போடலாமே. எதுக்கு இங்கே நின்னு டேப்போசிட்டை பறி கொடுக்கிறது