Mar 24, 2011

அட இந்த நடிகர்களின் அலும்பு தாங்கலப்பா!!


மார்ச் 24, எதிர்ப்புகள் இருந்ததால் நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் திமுகவில் இருந்து விலகி அதிமுக பக்கம் போனார். அவர் தற்போது எடுத்திருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’ படத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை வாங்கக்கூடாது என்று விநியோகஸ்தர்களுக்கு மிரட்டல்கள் வந்ததாகவும், அதனால் எஸ்.ஏ.சந்திரசேகரனே சொந்தமாக ரிலீஸ் செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலையில் விஜய் யாருக்கு பிரச்சாரம் செய்வார்? விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று தெரிவித்தூள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

’நான் இயக்கிய ‘’நீதிக்குத் தண்டனை’’ படம் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் ரிலீஸ் ஆனது. "நான் சிகப்பு மனித'னும் அப்படிதான். இதில் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அது கற்பனையாக இருக்கலாம். அந்த கற்பனையில் உண்மையும் கொஞ்சம் கலந்திருக்கலாம்.


இதுக்கு யார் பொறுப்பாவது. நான் சினிமாக்காரன். என் வேலையை நான் பார்க்கிறேன். நீதிக்கு தண்டனை' எடுக்கும் போது நான் தி.மு.க. உறுப்பினர் இல்லை. "சட்டப்படி குற்றம்' எடுக்கும் போது நான் அதிமுகவுக்கு சொந்தமானவன் அல்ல.

விஜய் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். பொது மக்களுக்கே விஜயின் மனநிலை புரிந்து இருக்கிறது. அவர் ஒரு அமைதியான போராளி. அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எல்லா விஷயங்களையும் புரிந்து வைத்திருக்கிறார். அனைத்து விதத்திலும் செல்வாக்கில் இருக்கும் நமக்கே இவ்வளவு பிரச்னையா? என்று அவர் யோசிக்கிறார்.

இப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொல்லியும் நம்மை ஏன் குத்துகிறார்கள்? என சிந்திக்கிறார். அவர் பலவீனமானவர் அல்ல, பலமானவர் என்பது இதில் இருந்தே புரிகிறது. கண்டிப்பாக விஜய் யாருக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்யமாட்டார். விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டால்,
அது அவர்களுக்கே தெரியும்’ என்றுதான் சொல்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்

No comments: