மார்ச் 28, : இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் திருச்சியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம், என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக நான் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆட்சி மாற்றத்தை பொதுவாகவே மக்கள் விரும்புகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ’’விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய இயக்கம். இந்த இயக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது.
அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு விஜய் ரசிகர்கள் முனைப்போடு இறங்கி வேலை செய்ய உள்ளனர். நாட்டில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும்.
அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நான் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment