வாஷிங்டன்: அமரிக்காவின் "நாசா" விண்வெளி ஆய்வு நிலையம் ஒரு பிரமாண்டமானது. இவர்கள்தான் இன்று விண்வெளி ஆராச்சியின் உட்ச்சத்தில் இருகிறார்கள் என்றால் வியப்பில்லை. அமெரிக்காவின் விண்வெளி மையமான "நாசா'வுக்கு, வழக்கம் போல அதிபர் ஒபாமா நிதி ஒதுக்கியிருந்தாலும், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நிதியை அதிகரிக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆயினும் இதை "நாசா' ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும், 18.7 பில்லியன் டாலர் (84,150 கோடி ரூபாய்) பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளார் அதிபர் ஒபாமா.
ஆனால், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல், இதே நிதியை வழங்கலாம் என்ற திட்டத்தையும் அவர் முன்வைத்துள்ளார். இதன் மூலம் சேமிக்கப்படும் நிதியை, நாட்டின் வேறு பல திட்டங்களுக்குச் செலவிட முடியும் என்றும் அவர் கூறினார். ஆனால், இதுகுறித்து கருத்து கூறிய "நாசா' நிர்வாகி சார்லஸ் போல்டன்,"மனிதர்கள் அமர்ந்து செல்லும் விண்வெளி விமானம் மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிதி ஒதுக்கீடு ஒருவகையில் எதிர்காலத்துக்கான முதலீடு தான்' என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment