
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி இழப்பு எற்பட்டதாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சர் ராசா கடந்த பிப்ரவரி 2-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் 14 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இன்று விசாரணை முடிந்தது சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கோர்டில் இன்று ஆஜர் படுத்தினர். சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற ராசாவை வரும் மார்ச் 3 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து ராசா தீகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த ஊழலின் வூற்று கண்ணாக இருந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களுக்கும், கருணாநீதி வகைராகளுக்கும், காங்கிரஸ் வகைராகளுக்கும் என்ன தண்டனை. இதுதான் எய்தவன் இருக்க அம்பை நோகுவது போல் என்பதா? மற்ற ஊழல் பெரிச்சாளிகள் எல்லாம் வெளியேதானே இருக்கிறது. இதில் இருந்து இது ஒரு கண்துடைப்பு என்பது நல்லா தெரிகிறது.
1 comment:
thamilanukku sirai/
santhosappaduvathum oru thamilane/
nanum thamilane/
Post a Comment