
பெருந்திரளமான மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் டாக்காநகர் முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது. சைக்கிள் ரிக்சாவில் 14 நாட்டு கேப்டன்களும் அழைத்து வரப்பட்டனர். விழாவில் மூன்று நாடுகளின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இசை நிகழ்ச்சி நடந்தது. நம் தமிழ்நாட்டின் நாக்கு முக்கா பாடல் மற்றும் பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி கலைஞர்களின் இசை நடன நிகழ்ச்சிளும், இலங்கை, வங்கதேச நாடுகளின் இசை நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் நடனத்தால் அசத்தினர்.
கனடா பாடகர் பிரைன் ஆடம்ஸ், இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர் சோனு நிகாம் இசைகுழுவினர் சங்கர் மகாதேவன், ஈசான் மற்றும் லாஸ் உள்ளிட்ட இசைமேதைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். வாணவேடிக்கைகளும் பிரம்மாண்ட அணிவகுப்பும் ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியது. இந்தவிழாவில் பல்வேறு நாடுகளிலிருந்தும் முக்கிய தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வங்கதேசம் சுதந்திரமடைந்த பிறகு தற்பொழுது தான் மிகப்பெரிய திருவிழாவான உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. வங்கதேச தலைநகர் டாக்காவில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை சந்திக்கிறது. இறுதிப்போட்டி ஏப்ரல் 2 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment