
மும்பை, பிப்.7: 10-வது உலககோப்பை வருகிற 19-ந்தேதி தொடங்கவிருக்கிறது. இதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் பிரவீன்குமார் இடம் பெற்றிருந்தார். ஆனால் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து பிரவீன்குமார் நீக்கப்பட்டுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா எதிரான ஆட்டத்தில் பிரவீனின் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தொடரில் இருந்து வெளியேறி நாடு திரும்பினார். காயம் விரைவில் குணமடைந்துவிடும் என்று எண்ணியதால் அவர் உலககோப்பை அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் எதிர்பார்த்ததைவிட காயம் பெரிதானதால் அவர் உலககோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரவீன்குமார் பதிலாக ஸ்ரீசாந்த் அல்லது இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்படுவர் என்று செய்திகள் வெளியாகிறது. இதனிடையே இர்பான் பதான், வினய்குமார் இருவரில் ஒருவரும் அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment