Feb 7, 2011

அந்தோ பரிதாபம்! காங்கிரஸ் இன்னும் எத்தனை? துண்டாக உடைய போகிறதோ?.

புதுச்சேரி, பிப். 7: புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் ரங்கசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தபின்னர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி யில் இருந்தும் விலகினார். இதையடுத்து புதிய கட்சியை தொடங்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். டெல்லி தேர்தல் ஆணையத்தில் தனது புதிய கட்சியை பதிவு செய்தார். புதிய கட்சிக்கு அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என பெயரிட்டு, கட்சியின் நிர்வாகிகள் பட்டியலையும் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார்.

இதேபோன்று கட்சிக்கு புதிய கொடியும் தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கொடி வண்ண முடைய அந்த கொடியின் நடுவே சிவப்பு பவளநிறத்தில் என்.ஆர்.என்ற எழுத்து பொறிக்கப்பட்டு அந்த எழுத்தின் மத்தியில் மஞ்சள் நிறத்தில் எலுமிச்சை பழமும் இடம் பெற்று உள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சி பதிவு வந்த பின்னர் தொகுதி நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் பெயர் அறிவிக்கப்படும் என்றும், கட்சியின் முதல் அரசியல் மாநாடு விரைவில் நடத்தப்படும். மாநாட்டில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.

No comments: