Feb 2, 2011

சச்சினுக்கு உலகக் கோப்பையை பரிசளிப்போம்: மகேந்திர சிங் தோனி!!

புது தில்லி, பிப்.2: இந்த முறை உலகக் கோப்பையை வென்று சச்சின் டெண்டுல்கருக்கு பரிசாக அளிப்போம் என்று இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது: நாங்கள் அனைவரும் டெண்டுல்கர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறோம். இந்த உலகக் கோப்பை அவருக்கு கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம். ஆனாலும் அவர் இன்னும் பல உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். இப்போதுள்ள அணி திறமையான, மிகச்சிறந்த அணியாகும் என்றார்.

இந்த உலகக் கோப்பையில் எந்த அணிகளெல்லாம் சிறப்பாக விளையாடும் என்று கேட்டபோது, அதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்த தோனி, நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இப்போது எங்களுடைய சிந்தனை எல்லாம் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தைப் பற்றி மட்டும்தான் உள்ளது என்றார். உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு குறித்து பேசிய அவர், மிகுந்த மனநிறைவு அளிப்பதாகத் தெரிவித்தார். இந்திய அணியின் ஒரே விக்கெட் கீப்பர் நான் மட்டும்தான் என்பது எனக்குத் தெரியும். அதற்காக கவலைப்படவில்லை என்றார்.

No comments: