உலககோப்பை கிரிக்கெட்: சென்னையில், நாளை டிக்கெட் விற்பனை; 4 ஆட்டங்கள் நடக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் உலக கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. உலக கோப்பை போட்டியில் 4 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. நியூசிலாந்து- கென்யா (பிப்ரவரி 20), இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா (மார்ச் 6), இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 17), இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 20) ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெறும் 4 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது. காலை 9.30 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் டிக்கெட்டுகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்டரில் விற்கப்படும்.
3-ந்தேதியில் இருந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் டிக்கெட்டுகள் கிடைக்கும். ஒருபோட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.500 (ஏ.பி.சி. ஸ்டாண்டு லோயா) ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.20 ஆயிரம் (டி.எப்.ஸ்டாண்டு, குளிர்சாதனம் மற்றும் உணவு வசதிகளுடன் கூடிய பாக்ஸ்) ஆகும்.
இதேபோல ரூ.1000, ரூ.2000, ரூ.2500, ரூ.3500, ரூ.4000, ரூ.5000, ரூ.10000 விலையிலும் டிக்கெட்டுகள் உள்ளன. நியூசிலாந்து- கென்யா போட்டிக்கு மட்டும் டிக்கெட் விலை குறைவானது. இந்தப்போட்டிக்கான குறைபட்ச டிக்கெட் விலை ரூ.250 ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.10 ஆயிரம். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டிகளுக்கு மேல் கொடுக்கப்படமாட்டாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment