Feb 1, 2011

முதியவர்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்!!

குழந்தைகள் பிறந்து 40 வருடமாகிறது; முதியவர்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம். ஸ்பெயின் நாட்டில் ஆல்மெடா டி லா கெஸ்டா என்ற கிராமம் உள்ளது. இது தலைநகர் மாட்ரிடில் இருந்து 100 மைல் தொலைவில் உள்ளது. இங்கு 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர். கடந்த 1940-ம் ஆண்டில் இங்கு 500 குடும்பங்கள் இருந்தன. அப்போது பெரும்பாலானவர்கள் வேலை தேடி இங்கிருந்து வெளியேறினர். அதன் பிறகு திரும்பவில்லை.

தற்போது இங்கு 15 குடும்பத்தினரே உள்ளனர். அவர்கள் அனைவரும் 65 வயது முதல் 70 வயதுக்கு மேல்தான் உள்ளனர். இதனால் அங்கு 40 வருடங்களாக புதிதாக குழந்தைகளே பிறக்க வில்லை. இப்போது இங்கு இருப்பவர்களில் 65 வயதுக் காரர்களே வயது குறைந்த இளைஞர்களாக உள்ளனர். இது ஒரு வித்தியாசமான கிராமம் என அங்கு வாழும் 82 வயது முதியவரான ஆர்துரோ ரெகாகோ கூறுகிறார் கிராமத்தின் நுழைவு வாயிலில் அழகிய விளையாட்டு மைதானம் உள்ளது. குழந்தைகள் இல்லாததால் விளையாடுவதற்கு ஆளின்றி வெறிச்சோடி கிடக்கிறது என்றார். .

No comments: