
கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும். சன் சீ கப்பலில் சென்றவர்களில் பலர் இறுதிக்கட்டப் போரில் தப்பியவர்கள் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வழியாகத் தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் வழியாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 க்கு மேற்பட்டோர் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்ததும், அவர்கள் தமது இராணுவக் கட்டமைப்பின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள். தற்போது பல அரசியல் நடவடிக்கைகளை அனைத்துலக மட்டத்தில் அவர்கள் மேற்கொண்டு வந்தாலும், ராணுவ நடவடிக்கையையே புலம்பெயர் தமிழ் சமூகம் விரும்புவதாக இலங்கை புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment