Feb 2, 2011

ஆஸ்ட்ரேலியாவை தாக்க உள்ள பெரும் சூறாவளி!!

அவுஸ்திரேலியாவின் குயின்லாந்தை நோக்கி பாரிய சூறாவளி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மணிக்கு 1000 கிமீ வேகத்திற்கு பலமான காற்று வீசும் எனவும் இது குயின்லாந்தின் கெயாறன் போன்ற பகுதிகளுக்கு மணிக்கு 250 கிமீ வேகமான காற்றை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. பாரிய வெள்ளப்பெருக்கை சந்தித்த குயின்ஸ்லாந்து மாநிலம் இன்னொரு பாரிய அழிவை யாசி சூறாவளி என அழைக்கப்படும் இச்சூறாவளி மூலம் இன்னும் சில மணி நேரங்களில் சந்திக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளபோதும் உறுதியான உத்தரவாதம் எதனையும் எதிர்பார்க்கமுடியாது என தெரிவிக்கப்படுகின்றது. சூறாவளி தடுப்பு கூரைகள் கொண்ட வீடுகள் கூட இப்பலத்த சூறாவளிக்கு பாதுகாப்பானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: