Feb 5, 2011
கூட்டணி சேர்ந்தே போட்டி!! வென்ற தொகுதிகளை மீண்டும் கேட்போம்!!: ராமதாஸ்!!
மயிலாடுதுறை, பிப். 5: நாகை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் செம்பனார் கோவிலில் நடந்தது. கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது கட்சியில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகளை மாற்றி விட்டு இளைஞர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.43 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா தொழில் சார்ந்தவர்களே தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள். இந்த நிலையை பா.ம.க. வினால்தான் மாற்ற முடியும். இதற்கு கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லாததால் தமிழகத்தில் பா.ம.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை.
வாக்கு வங்கிகளாக செயல்படும் வன்னியர் உள்ளங்களில் வன்னியர் ஒருவரே ஆள வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ம.க. கூட்டணி அமைத்தே போட்டியிடும். தற்போது பா.ம.க.விடம் உள்ள அனைத்து தொகுதிகளையும் கூட்டணி கட்சியிடம் கேட்டு பெறுவோம்.போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஆம். வன்னியரை வன்னியரே ஆள வேண்டும் அதுவும் ராமதாஸ் தான் ஆள வேண்டும்.ராமதாஸைவிட நல்லவர் வேறயாரும் கிடையாது என்பதை நாடறியும். சினிமாக்காரன் ஆண்டாலும் சரி,ராமதாஸ் ஆண்டாலும் சரி இரண்டும் ஒன்றுதான். தகுதியானவன் ஆள வேண்டும் நிதிஷ் குமார் மாதிரி,நரேந்திர மோடி மாதிரி நாட்டு நலந்தான் முக்கியமே தவிர சாதி அல்ல.
அன்புள்ள விஜயன் அவர்களுக்கு நீங்கள் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருங்கள் பரவாயில்லை. ஆனால் முதலில் மனிதர்களுக்கு ஆதரவு கொடுங்கள் மிருகங்களுக்கு இல்லை. நீங்கள் சொல்லும் நரந்திர மோடி நாட்டு நலனில் அக்கறை உள்ளவர் என்று நீங்கள் நினைக்கும் கருத்து மிகவும் தவறானது. அவர் ஒரு முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்களை ஒரு இன அழிப்பு முறையில் கொன்று குவிக்க காரணமாக இருந்தவர். அவர் ஒரு மத தீவிரவாதி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
Post a Comment