Feb 4, 2011
நீதிதேடும் பாபர் மஸ்ஜித்!! கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கோவை : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக நீதிதேடும் பாபர் மஸ்ஜித் என்ற தலைப்பில் பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகளை நாட்டுமக்களுக்கு அம்பலப்படுத்த தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் நடத்தப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் ஆறு முதல் அதே பயங்கரவாதிகளால் படுகொலை செய்யயப்பட்ட தேசபிதாவின் நினைவு நாளான ஜனவரி 30 வரை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தேசிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் கோவை மாவட்டம் கோட்டை இக்பால் திடலில் மாபெரும் பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் 200பெண்கள் உட்பட 1900 நபர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் இலக்கிய சோலை வெளியீடுகளான 'மொசாத் ' மற்றும் 'கர்கரேயை கொன்றது யார்' என்ற நூல்கள் அறிமுக படுத்தப்பட்டன மேலும் பாபர் மஸ்ஜித் பற்றிய விழிபுணர்வு நாடகமும் நடைபெற்றது. முன்னதாக டிசம்பர் ஆறு அன்று கோவை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் நீதி தேடும் பாபரி மஸ்ஜித் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மற்றும் மூத்த எழுத்தாளர் ஞானைய்யா ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment