தமிழர்கள் வரலாற்று ரீதியாக தனிப்பட்டவர்கள். மொழி, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், ஆட்சிமுறை, நன்னெறிகள், என அனைத்திலும் பண்பட்டவர்கள். நாகரீகத்தை தன்னகத்தே கொண்டவர்கள். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டியது. இதற்கு உலக அரங்கில் நிச்சயமாக ஒரு தனிநாடு அங்கீகாரம் தேவை. இது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை. இந்தியா என்ற நாட்டில் மாநில சுயாட்சி இல்லை. இலங்கையில் சுதந்திரமே இல்லை. இத்தகு நிலையில் தமிழர் பெட்டகங்கள் பாதுகாக்கப்படுமா என்பது கேள்விகுறியே.
இந்தியா என்றா நாடு எப்படி உருவாக்கப்பட்டது? இங்கிலாந்தியர் தங்களுக்கு ஒரு வியாபாரசந்தையாக தானே இந்தியாவை உருவாக்கினார்கள். இந்தியா என்ற மாட்டு சந்தையில் அடிமாட்டு விலையில் இருப்பதை விட தமிழன் இறப்பது மேல். நிச்சயமாக இன்றைய தமிழர் தலை முறையினர் இதை யோசித்தேயாக வேண்டும் தமிழன் என்ற உணர்வை விட்டுவிட்டு இந்தியன் என்ற உணர்வு ஏற்கவேண்டும் என்பது எவ்வளவு பெரிய அடக்குமுறை. முதலில் நான் தமிழன் பின்புதான் இந்தியன். முதலில் இந்தியன் பின்பு தான் தமிழன் என்றால் எப்படி ஏற்க முடியும்?
இந்தியன் என்ற உணர்வு தோன்றி 60 வருடங்கள் தான் ஆகிறது. ஆனால் தமிழர் என்ற உணர்வு தமிழ் மொழி தோன்றியது தொட்டு இருக்கிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு இந்தியா என்ன மதிப்பு அளித்துள்ளது? இலங்கை என்ற நாட்டின் நட்புக்காக கொடுக்கும் விலையில் ஒரு துளி சொந்த நாட்டு தமிழர்களுக்கு கொடுத்துள்ளதா?
மாநில சுயாட்சி அதிகாரம் தரப்பட வேண்டும். அது இல்லை என்றால் தனிநாடு அமைப்பது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை. அம்பேத்காரின் கோரிக்கை இது தான் ஒடுக்கப்பட்ட வர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கா விட்டால் இந்தியாவே தேவை இல்லை என்பது தான். அதையேதான் இந்தியாவுக்கு இலங்கை தான்முக்கியம் என்றால் தமிழனுக்கு இந்தியா தேவை இல்லை. இந்தியை துரத்திய தமிழனுக்கு இந்தியாவை துரத்துவது ஒன்றும் கடினமல்ல. எங்கள் கோரிக்கை இதுதான். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்திய இறையாண்மைக்கு மட்டும் மதிப்பளியுங்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment