
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து நேற்று நாகப்பட்டினம், அவுரித்திடலில் நடந்த மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்தை மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ மேற்கொண்டார். உண்ணா விரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரு.த.பாண்டியன் தொடங்கி வைத்து இலங்கை அரசை கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடினார். நிறைவுரையாற்றிய வைகோ தமிழக மீனவர்கள் இந்திய பிரஜைகளா? இல்லையா? எங்கள் வரி பணத்தில் செயல்படும் இந்தியாவின் கடற்படைக்கு தமிழர்களை காப்பாற்றும் கடமை உள்ளதா? இல்லையா? இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்குமானால், இலங்கையின் இறையாண்மையை காரணமாக காட்டி,மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்குமானால், இந்தியாவின் இறையாண்மை சிதறிப்போகும், இந்தியாவின் ஒருமைப்பாடு சுக்குநூறாகும்” என்று முழங்கினார். இறுதியாக அதிமுக மீனவர் அணி செயலாளர் திரு.கலைமணி, வைகோ அவர்களுக்கு பழரசம் தந்து உண்ணா விரதப் போராட்டம் முடித்து வைத்தார். நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்
No comments:
Post a Comment