புதுடெல்லி, பிப்.18-பாபர் மசூதி இடிப்பு வழக்கு அத்வானி மீது உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு. அயோத்தியில் பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்டது. இந்த வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 20 பேர் மீது மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 2001 இல் அத்வானி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இதனை எதிர்த்து ஐக்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஐக்கோர்ட்டும் கீழ்கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து கடந்த ஆண்டு மே20ந்தேதி தீர்ப்பளித்தது. இந்நிலையில் தற்பொழுது சி.பி.ஐ. இன்று அத்வானி உள்ளிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல் முறையீடு செய்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment