Feb 3, 2011
எதிரிகளை மான்னிக்கலாம்!! துரோகிகளை மான்னிக்க முடியாது!!: சோனியாகாந்தி!!
சென்னை பிப் 3 : "" பா.ம.க.,வுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவே எதிர்ப்பு தெரிவித்தார்; நான் ராமதாசுடன் பேசிப் பார்க்கிறேன் என தெரிவித்தேன், அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை,'' என முதல்வர் கருணாநிதி, பொதுக்குழுவில் பேசியுள்ளார். இதன் மூலம், தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. பா.ம.க.,வைச் சேர்த்துக் கொள்வது குறித்து சோனியாவிடம் பேசினேன். "அப்போது அவர், எதிரிகளை கூட நாம் மன்னித்து விடலாம். துரோகிகளை மன்னிக்க வேண்டுமா, அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? என்றார். நான் அவரிடம், ராமதாசின் குணத்தைப் பற்றி எடுத்துக் கூறி, அவரை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். ஆனால், அதற்கு அவர்கள் உடன் படாமல், ஒரு முறைக்கு நூறு முறை யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசியதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர். முதல்வரின் இந்த பேச்சிற்கு பொதுக்குழுவில் பலத்த வரவேற்பும் கிடைத்தது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
idu avarukkum porundum ravi.r
Post a Comment