
சென்னை,பிப்.4: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அதிமுகவில் விஜய் இணைந்து விடுவார் என்றும், தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. தமிழக அரசியல் கூத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ!!பொறுத்திருந்து பார்ப்போம்!!
No comments:
Post a Comment