Feb 1, 2011

ஹுஸ்னி முபாரக் வெளியேற வேண்டும் :அமெரிக்க செனட்டர்!!

கெய்ரோ,பிப்.2:எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலக்கோரி பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று கூடியுள்ளனர். இன்று காலை முதல் மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி படையெடுத்து வந்தனர். கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தினால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர். இதைப்போன்று அலெக்ஸாண்ட்ரியாவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,ஜன:எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் வெடித்துக் கிளம்பிய சூழலில் அந்நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டுமென மூத்த அமெரிக்க செனட்டர் வலியுறுத்தியுள்ளார். எகிப்து மற்றும் துனீசியாவின் நிகழ்வுகளைக் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட செனட் கூட்டத்திற்கு பிறகு செனட்டர் பில் நெல்சன் தனது கருத்தை வெளியிட்டார். இனிமேலும் முபாரக் ஆட்சியை விட்டு கீழே இறங்காமல் இருக்கமுடியாது.
பாதுகாப்பு படையை பிரயோகித்தும், இணைய தளத்தை செயலிழக்கச் செய்தும் புரட்சியாளர்களை தடுக்கவியலாது. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போன்ற வலுவான கட்சிகளுக்கு வாசலை திறந்துவிட வேண்டும் என நெல்சன் தெரிவித்துள்ளார்.

No comments: