Feb 3, 2011
ராசா டைம் !!!
* வாத்தியார் மாணவனிடம் தஞ்சாவூரை ஆண்ட பழைய ராஜாவின் பெயர் தெரியுமா? தெரியாது சார் !சரி மதுரையை ஆண்ட பழைய ராஜாவின் பெயர் தெரியுமா ? தெரியாது சார் எனக்கு தெரிந்த ஒரே ராஜா ஸ்பெக்ட்ரம் ராசா சார் !! ஹா! ஹா !!
*"மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?" "ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்தி விட்டாராம்!"
*"தலைவர் அப்பாவி மாதிரி நடிக்கிறாரே..?" "ஆமாம்! ஸ்பெக்ட்ரம்னா என்னன்னு கேட்கிறாரே?"
*"தலைவரே! 'அந்த 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல்'னு மேடையில திட்டிப் பேசினீங்களே... அது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி!" "இவ்வளவு நாளைக்கு வட்டி போட்டுக் கூட்டிப் பாரு கணக்கு சரியா வரும்!"
*'மரியாதை நிமித்தமா என்னைச் சந்திக்க வந்தாங்க'னு ராசா சொல்றதை என்னால் நம்ப முடியலை!" "யாரை அப்படிச் சொல்றாரு?" "சி.பி.ஐ அதிகாரிகளைத்தான்!"
*"அந்த குடிகாரன் ரொம்ப அப்பாவியா இருக்கானே!" "டாஸ்மாக்குல போயி புதுசா வந்திருக்கிற 'ஸ்பெக்ட்-ரம் இருக்கான்னு கேக்கறானே!"
*அரசியல்லயும் 'ராகிங்'கா என்னய்யா சொல்றே..?" "புதுசா கட்சி தொடங்கின தலைவரைப் பார்த்து ஆ.ராசா மாதிரி நடந்து காட்டச் சொன்னாங்களாம்!"
*நமது ராஜா ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாரே ஏன்?" "ராசாவா.... பிறக்கவில்லையே என்கிற வருத்தம்தான்!"
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ரெம்பவும் அசிங்கம இருக்கு ச்பெக்ரம் என்ன என்று தெரியாத வர்கள் தான் இந்த மாதிரி பேசுவார்கள் ,இது உழல் இல்லை ,இது ஒரு இழப்பு ...சரியாக் தெரிந்து கொண்டு அவரை கிண்டல் செய்யவும் ....இதில் அவர் மட்டும் சம்பத படவில்லை ...என்பதை நினைவில் வைக்கவும் ....
Post a Comment