
எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் இருந்தால் விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று, முன்னாள் அமைச்சர் ராஜா விலக வேண்டும் என்று நாடாளுமன்றமே வற்புறுத்தியதன் பேரில் அவர் விலக நேர்ந்ததோ, அதே போல கருணாநிதி மாநில அரசின் முதல்வராக இருப்பதனாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கிய கட்சியின் தலைவராக இருப்பதனாலும், முறையான விசாரணை நடைபெறாமல் இடையூறுகள் நேர்வதற்கும், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படும். எனவே, முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறவும், எவ்வித குறுக்கீடும் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே வழி வகுக்கும். அவர் பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர்.
தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் எந்த நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கும் இது உகந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment