Feb 27, 2011

வந்தவர்களை வாழ வைக்கும் தமிழகம்!!

புதுதில்லி, பிப்.27: உலகம் முழுவதும் 95 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியான மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிவசேனை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மன்மோகன் சிங்குக்கு சிவசேனை எம்பி சஞ்சய் ரெளத் கடிதம் எழுதியுள்ளார். இதுவரை தமிழ், கன்னடம் மற்றும் தெலங்கு ஆகியவற்றுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும் : தமிழகம்தான் வந்தவர்களை வாழவைக்கும் நாடு. தமிழகத்தில் மலையாளி, கன்னடகாரர்கள், வடநாட்டு சேட்டுகள், மராத்தி இப்படி இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலத்து காரர்களும் வந்து வியாபாரம் செய்கிறார்கள், வாழ்ந்து வருகிறார்கள். நாம் தான் எல்லோருடனும் சகோதர பாசத்தோடு பழகி வருகிறோம். ஆனால் அவர்கள் தமிழர்களை ஒரு போருட்டகேவே மதிப்பதில்லை. கர்நாடகாகரன் தண்ணி கேட்டால் அடிக்கிறான், இந்த பயங்கரவாத சிவேசெனைகாரன் மும்பையில் உள்ள தமிழர்களுக்கு கொடுத்த துன்பங்கள்தான் எத்தனை? எத்தனை? ஒரு மொழி என்பது அதன் இனிமை, மற்றும் இலக்கிய நயம், மற்றும் எந்த மொழியின் கலப்பும் இல்லாமல் சுத்தமாக எல்லாவிதமான சொற்களுக்கும் பொருள் கொடுப்பதாக இருக்க வேண்டும். எண்ணிக்கையை வைத்தா? பார்க்க முடியும். அப்படி பார்த்தால் கணிப்பொறி மொழியான ’சி’ அல்லது சி++ க்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கவேண்டும். மராத்தியை விட அதிகமானோர் இதை பயன்படுத்துகின்றனர்.

No comments: