
இதையடுத்து, களத்தில் இறங்கிய போலீசார், டில்லி மற்றும் சண்டிகாரில் இத்தேர்வு நடக்கும் மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த மையங்களுக்கு சென்று, வினாத்தாளை வாங்கி, தாங்கள் வைத்திருந்த நகலுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இரண்டும் ஒரே மாதிரி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இதில் பவான் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவரை கைது செய்து விசாரித்ததில், வினாத்தாளை சிலருக்கு அவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு எழுதிய மூன்று பேரிடம் விசாரித்து வருகிறோம். கைது செய்யப்பட்டுள்ள பவான், ஏற்கனவே, ஒரு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டவர். இவர், ஐந்து லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு வினாத்தாளை விற்றதாக முதல் கட்ட விசாரணையில் அறிந்தோம்' என்றார்.
No comments:
Post a Comment